தேவையானவை:
- அரிசி மாவு - 1 1/2 கப்
- கடலை மாவு - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
- வெண்ணை - 2 டீஸ்ப்பூன்
அரைத்துக் கொள்ள:
- வர மிளகாய் - 4
- பூண்டு - 6 பல்
- இஞ்சி - சிறிய துண்டு
- பெருஞ்சீரகம் - 1/4 டீஸ்ப்பூன்
செய்முறை:
- அரைத்துக் கொள்ள வேண்டியவற்றை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
- அரிசி மாவு, கடலை மாவு, உப்பு, வெண்ணை ஆகியவற்றுடன் வடிகட்டிய தண்ணீர் சேர்த்து பிசையவும்.
- வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும், ரிப்பன் பக்கோடா அச்சில் மாவினை இட்டுப் பிழியவும்.
- பிழியும் போது ஒன்றன் மேல் ஒன்று விழாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- சற்று நேரத்தில் திருப்பிப் போட்டு, பொன்னிறமாகும் போது எடுக்கவும்.
4 comments:
Ribbon pakoda looks so good. I am sure going to try it.This is one of my favorite item. Thanks for sharing.
Radha
Anonymous said...
//Ribbon pakoda looks so good. I am sure going to try it.This is one of my favorite item. Thanks for sharing.
Radha//
செய்து பாருங்கள் தோழி. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிங்க.
இதை ட்ரை பண்ணி பாக்கறோம்..
நன்றி..
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_30.html) சென்று பார்க்கவும்... நன்றி...
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...
Post a Comment