
இட்லி, தோசை எல்லாம் நாம மறக்கறதுக்கு முன்னாடி =;) அதுக்கு ஏத்த ஒரு சைட் டிஷ் இன்னிக்கு பார்க்கலாம். தேவையான பொருட்கள், செய்முறை எல்லாமே ரொம்ப எளிது. சிறுவயதில் இந்த சட்னி வீட்டில் வைத்தால், இட்லி, தோசை எல்லாம் கணக்கில் அடங்காமல் உள்ளே இறங்கும். இப்பவும் ஒன்றும் குறைவில்லை :))
ஒரு சில நாட்கள் வரை கெடாமலும் இருக்கும். இந்த அவசர யுகத்தில் ஒரு நாளைந்து நாட்களுக்கு வருமாறு செய்து வைத்துக் கொள்ளலாம்.
தேவையானவை:
- வரமிளகாய் - 10 - 12
- பூண்டு - 4 பல்
- சின்ன வெங்காயம் - 10 - 15
- தக்காளி - 2
- புளி - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
- தேவையான பொருட்கள் எல்லாவற்றையும் மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- வானலியில் நல்லெண்ணெய் (5 டீஸ்பூன்) விட்டு, காய்ந்த எண்ணெயில், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
- சிறிது நேரத்தில், மிளகாய் கலவையை சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- எண்ணை வெளியில் வரும்வரை வதக்கினால் நன்றாக இருக்கும். இந்த காலத்தில் எங்கேப்பா நேரம்னு நீங்க சொல்றது கேக்குது :))அதனால், ஓரளவு பச்சை வாடை நீங்கினால் போதும்.
- நாக்கில் நீர் ஊற வைக்கும் சுவையான மிளகாய் சட்னி ரெடி.
குறிப்பு: தாளித்தவுடன், நன்கு அறிந்த சிறிது பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கினால், சுவை மேலும் அதிகரிக்கும். சட்னி அளவும் கூடும் ... :)
5 comments:
ம்ம்ம்ம். சட்டுனு செய்து சாப்பிடற சட்டினி தான். மிளகாய் இல்லாம
செய்ய முடியுமான்னு பார்க்கறேன் சதங்கா.
உங்க பதிவைப் பாத்துக் கொண்டெ இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டேன்:)
நான் வதக்கி அரைத்திடுவேன். நீங்கள் பச்சையாக அரைத்து பின் வதக்கச் சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்த்துடலாம்:), கூட 4 இட்லி ரெடியா வச்சுக்கிட்டு:))!
வல்லிசிம்ஹன் said...
//ம்ம்ம்ம். சட்டுனு செய்து சாப்பிடற சட்டினி தான்.//
இது தான் 'சட்னி'யின் பெயர்க் காரணமோ :))
//மிளகாய் இல்லாம
செய்ய முடியுமான்னு பார்க்கறேன் சதங்கா.//
அப்படியே மிளகாயைக் குறைத்து, வதக்கி அரைத்து, தக்காளி சட்னி சட்னி ஆக்கிடுங்க.
//உங்க பதிவைப் பாத்துக் கொண்டெ இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டேன்:)//
வயிறு நிறைவதை விட, மனம் நிறைவது ரொம்ப சந்தோசம். நன்றி வல்லிம்மா.
ராமலக்ஷ்மி said...
//நான் வதக்கி அரைத்திடுவேன். நீங்கள் பச்சையாக அரைத்து பின் வதக்கச் சொல்லியிருக்கிறீர்கள். செய்து பார்த்துடலாம்:), கூட 4 இட்லி ரெடியா வச்சுக்கிட்டு:))!//
நீங்க செய்வது போல தக்காளி சட்னி செய்வார்கள் எங்கள் வீட்டில்.
இந்த முறையில் ட்ரை செய்து பாருங்கள் .... அதான் கூட நாலு இட்லி என்று சொல்லி அசத்திட்டீங்க ... நான் வேறு சொல்லணுமா.
chatni romba nalla erunthadu
Post a Comment