Saturday, February 14, 2009

வாழைப்பூ வடை



தேவையானவை:
  • வாழைப்பூ
  • கடலை பருப்பு - 1 கப்
  • வர மிளகாய் - 4 ~ 6
  • பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
  • மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
  • தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் - 2
  • கறிவேப்பிலை - 10~15 இலைகள்
  • பெருங்காயம் - சிறிதளவு
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • கடலைப் பருப்பை நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.
  • வாழைப்பூவை பிரித்து, உள்ளிருக்கும் நரம்புகளை நீக்கவும்.
  • வானலியில் எண்ணை விட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • வாழைப்பூவில் கொஞ்சம் உப்பு சேர்த்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றவும்.
  • அரைத்த வாழைப்பூவைப் பிழிந்து, தண்ணீரை அகற்றி விடுங்கள்
  • மிக்ஸியில் வரமிளகாய், பெருஞ்சீரகம் மற்றும் ஊறிய கடலைப் பருப்பையும் சேர்த்து 70% அரைக்கவும்.
  • அரைத்த பருப்புடன், மஞ்சள் பொடி, உப்பு, தேங்காய் துறுவல், நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், வாழைப்பூ சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்.

4 comments:

உயிரோடை said...

சதங்கா இது அநியாயம். சுவீடனில் ஒரு மைக்ரோ வேவ் மட்டும் வைச்சிட்டு அல்லாடிட்டு இருக்கும் என்னிடம் வாழைப்பூ வடை என்று சொல்லி இந்திய நினைவுகளை தூண்டி விட்டால் எப்படி? :(

வீட்டுக்கு போனதும் செய்து பார்க்கறேன்.

சதங்கா (Sathanga) said...

மின்னல் said...

//சுவீடனில் ஒரு மைக்ரோ வேவ் மட்டும் வைச்சிட்டு அல்லாடிட்டு இருக்கும் என்னிடம் //

படத்தை பார்த்து பசியாறுங்க :)))

ஜோக்ஸ் அபார்ட்.

ஊருக்கு போய் மறக்காம செய்து பாருங்க. (நல்லா வந்தா :))) ஒரு நாலைந்து எங்களுக்கு அனுப்பி வைங்க :)

domain registration india said...
This comment has been removed by a blog administrator.
cheena (சீனா) said...

அன்பின் சதங்கா - வலைச்சர அறிமுகம் மூலம் இங்கு வந்தேன் - வாழைப்பூ வடை அருமை - அடிக்கடி சாப்பீட்டாலும் உஙக் வீட்டு வடை சாப்பிடணும் போல இருக்கு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா