Thursday, January 29, 2009

உளுந்து வடை



மிக எளிய முறையில், சாஃப்டா (சத்தமே போடாம :))) ஒரு மெதுவடை செய்யலாம் வாங்க ...

தேவையானவை:


உளுந்து - 1 கப்
ப.மிளகாய் - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 10-15 இலைகள்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:
  • உளுந்தை, குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
  • க்ரைண்டர் அல்லது மிக்ஸியில் ப.மிளகாய் போட்டு ஒரு சுற்று அரைக்கவும்.
  • இதனோடு ஊறிய உளுந்தைச் சேர்த்து அரைக்கவும். நடுவே உப்பை சேர்த்துக் கொள்ளவும்.
  • வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் ஏற்றவும்.
  • நன்கு அரைத்த உளுந்தில், கறிவேப்பிலை மற்றும் சீரகத்தை சேர்த்து, கையில் பிசறவும்.
  • தண்ணீர் தொட்டு சிறு உருண்டைகளாக எடுத்து, உள்ளங்கையில் வைத்து தட்டி, தண்ணீர் தொட்டு துளையிட்டு, சூடான எண்ணையில் போடவும்.
  • சிறிது நேரத்தில் திருப்பி விட்டு, பொன்னிறமாக ஆகும் சமயம் (அல்லது எண்ணை குமிழிகள் குறைந்த நேரம்) எடுத்து விடலாம்.

டிப்ஸ்:
  • வடை கடினமாக இருக்கிறது என்றால், மாவில் தண்ணீர் தெளித்து, மீண்டும் கொஞ்ச நேரம் அரைக்கவும்.
  • வடை எண்ணை குடிப்பது போல் இருந்தால், சிறிது அரிசி மாவு சேர்த்து பிசைந்து கொள்ளவும்..

10 comments:

துளசி கோபால் said...

'சொல்வது யாருக்கும் எளியவாம்' குறள் நினைவுக்கு வருது சதங்கா.

எனக்கும் இதுக்கும் தீராத ஒரு வழக்கு இருக்கு.

நம்ம வீட்டுலே என்னதான் கவனமா உளுந்து அரைச்சாலும் அது போண்டாவாகத்தான் வருது.

ஹனுமானுக்கே நம்ம வீட்டில் போண்டா மாலைதான்னாப் பாருங்களேன்!

ராமலக்ஷ்மி said...

துளசி மேடம்,
எங்க வீட்ல வடை மாலைதான்:)))!

சதங்கா, நீங்க சொன்ன முறை போலதான் செய்வது வழக்கம். மிளகும் சேர்க்கலாமே.

நானானி said...

துள்சி வீட்டு அனுமார் பாவம்!!
ஜுஜுபி மேட்டர் அவர்க்கு கைவரவில்லையா? தண்ணீரை ஸ்பூன் ஸ்பூனாக விட்டுத்தான் வடைக்கு அரைக்க வேண்டும். உளுந்தோடு சிறிது அரிசியும் சேர்த்து அரைத்தால் நன்றாக வடையாகவே வரும். இனி உங்க ஆஞ்சனேயருக்கு வடை...வடை மாலை சாத்தும் நாள் அதிக தூரமில்லை.

நானானி said...

சதங்கா! உங்க வடை ரெசிப்பி நல்லாருக்கு. கொஞ்சம் அரிசியும் சேர்த்து அரைத்துப் பாருங்கள் நல்லா வரும்.

நானானி said...

சதங்கா! உங்க வடை ரெசிப்பி நல்லாருக்கு. கொஞ்சம் அரிசியும் சேர்த்து அரைத்துப் பாருங்கள் நல்லா வரும்.

goma said...

சதங்கா வடையைப் பார்க்கவே மொறு மொறுப்பாக இருக்கிறது.
மறுபடியும் அந்த வடை படத்தைப் பாருங்கள் ஒரு வடைதான் இருக்கும். ,ஒரு வடையை நான் எடுத்துக் கொண்டேன்.விருந்தோம்பலுக்கு ரொம்..ம்ப நன்றி.

நானானி said...

கோமா கொத்திக்கொண்டு போன வடையை...நான்,'கோமா..கோமா..அழகாக இருக்கிறாயே! ஒரு பாட்டு பாடு !'என்றேன். கோமா பாட வடை கீழே விழ அதைநான் கவ்விக்கொண்டேன். சேரியா சதங்கா?

சதங்கா (Sathanga) said...

ungal anaivarin melana atharavu paarthu romba santhosam :)))

sariyana nerathukku pathil tharaatharkku mannikkavum. inga ice storm vanthathila irunthu namma madik kanini murandu pannuthu. marunthu order pannirukkom.

poruthukanga english-l type pannuvatharkku ...

சாந்தி மாரியப்பன் said...

ஒரு காலத்துல எங்கூட்லயும் போண்டாவாத்தான் வந்தது. இப்ப தேறிடுச்சு.. :-))

எல்லா உணவுகளுக்கும் பக்கவாத்தியமாவும் வெச்சிக்கலாம்.. சூப்பர்.

Anonymous said...

வணக்கம்
இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது சென்று பார்வையிட.இதோ.
http://blogintamil.blogspot.com/2013/11/blog-post.html?showComment=1383269378727#c4882904206101416278

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்