Thursday, January 1, 2009

மா உருண்டை



அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

மிக மிக எளிதான ஒரு ஸ்வீட் செய்யலாம் இன்னிக்கு.

தேவையானவை:

  • பாசிப்பருப்பு மாவு - 1 கப்
  • பொடியாக்கிய சர்க்கரை - 1 கப்
  • நெய் - 6 டீஸ்பூன்

செய்முறை:
  • பாசிப்பருப்பை நன்கு வறுத்து, மிஷின் அல்லது மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் பாசிப்பருப்பு மாவு எடுத்துக் கொள்ளவும்.
  • பௌடர்ட் சுகர் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது. இல்லை என்றால், சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் எடுத்து, பாசிப்பருப்பு மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
  • அடுப்பை மீடியம் சூட்டில் வைத்து, வானலியில் நெய் விட்டு சூடாக்கவும்.
  • மெல்லிய சூடான நெய்யில், மாவுக் கலவையை சேர்த்து கலக்கி, மாவில் மிதமான சூடு ஏறியவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
  • கட்டிகள் இல்லாமல் மாவை நன்கு பிசறவும். பின், சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
  • அழகான சுவையான மா உருண்டை ரெடி.

11 comments:

துளசி கோபால் said...

ஒரு கால்கப் முந்திரி, திராட்சையை அந்த நெய்யிலேயே வறுத்துச் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.

விருப்பமானால் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்தால் தெய்வீக மணம் கிடைக்கும்:-)


இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.

cheena (சீனா) said...

ஆகா ஆகா சதங்கா - மாவுருண்டை நேத்திக்கே ஆர்டர் பண்ணினே !! இன்னும் வரலியே ...... ம்ம்ம்ம் - துளசி சொன்னதெயும் செய்யலாமே

Anonymous said...

Excellent idea. I am sure going to try this recipe. Thanks.

Radha

ராமலக்ஷ்மி said...

இனிப்புடன் தொடங்கிய இனிய புத்தாண்டு. எடுத்துக் கொண்டேன் சில் உருண்டைகள்:)! செய்தும் பார்க்கிறேன். நன்றி.

வாழ்த்துக்கள் சதங்கா!

சதங்கா (Sathanga) said...

துளசி கோபால் said...

// ஒரு கால்கப் முந்திரி, திராட்சையை அந்த நெய்யிலேயே வறுத்துச் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.

விருப்பமானால் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்தால் தெய்வீக மணம் கிடைக்கும்:-)//

டீச்சர், கூடுதல் தகவல்களுக்கு நன்றி. எங்கள் ஊர்களில் இது போல் ப்ளைனாக தான் செய்வார்கள்.

சதங்கா (Sathanga) said...

cheena (சீனா) said...

// ஆகா ஆகா சதங்கா - மாவுருண்டை நேத்திக்கே ஆர்டர் பண்ணினே !! இன்னும் வரலியே ...... ம்ம்ம்ம் - துளசி சொன்னதெயும் செய்யலாமே//

இங்க பார்சேல் சொல்லிட்டு, தங்க்ஸ் கிட்ட ரெசிப்பி வாங்கி, பதிவு போட்டா, சரி எல்லாரும் வந்து எடுத்துக்கட்டுமேனு, பார்சல படமும் புடிச்சு போட்டாச்சு :)))

சதங்கா (Sathanga) said...

//Anonymous said...

Excellent idea. I am sure going to try this recipe. Thanks.

Radha//

Try it out. It is very simple and you will love it.

சதங்கா (Sathanga) said...

ராமலக்ஷ்மி said...

// இனிப்புடன் தொடங்கிய இனிய புத்தாண்டு. எடுத்துக் கொண்டேன் சில் உருண்டைகள்:)! செய்தும் பார்க்கிறேன். நன்றி.

வாழ்த்துக்கள் சதங்கா!//

மிக்க மகிழ்ச்சி. செய்து பாருங்கள். எங்க ஊரில் ரொம்ப ஃபேமஸ் இனிப்புகளில் இவரும் ஒருவர் :)))

Anonymous said...

ஆஹா.......என்ன ருசி

சதங்கா (Sathanga) said...

கவின் said...

// ஆஹா.......என்ன ருசி//

படத்தைப் பார்த்தே சொல்றீங்களா. இல்லை சட்டுனு செஞ்சு பாத்திட்டீங்களா ?? :))

Hindu Marriages In India said...

மிக நன்று