அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!
மிக மிக எளிதான ஒரு ஸ்வீட் செய்யலாம் இன்னிக்கு.
தேவையானவை:
- பாசிப்பருப்பு மாவு - 1 கப்
- பொடியாக்கிய சர்க்கரை - 1 கப்
- நெய் - 6 டீஸ்பூன்
செய்முறை:
- பாசிப்பருப்பை நன்கு வறுத்து, மிஷின் அல்லது மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் பாசிப்பருப்பு மாவு எடுத்துக் கொள்ளவும்.
- பௌடர்ட் சுகர் இப்பொழுது கடைகளில் கிடைக்கிறது. இல்லை என்றால், சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பௌடர் ஆக்கிக் கொள்ளவும். இதிலிருந்து ஒரு கப் எடுத்து, பாசிப்பருப்பு மாவுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- அடுப்பை மீடியம் சூட்டில் வைத்து, வானலியில் நெய் விட்டு சூடாக்கவும்.
- மெல்லிய சூடான நெய்யில், மாவுக் கலவையை சேர்த்து கலக்கி, மாவில் மிதமான சூடு ஏறியவுடன், அடுப்பில் இருந்து இறக்கவும்.
- கட்டிகள் இல்லாமல் மாவை நன்கு பிசறவும். பின், சிறு சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும்.
- அழகான சுவையான மா உருண்டை ரெடி.
11 comments:
ஒரு கால்கப் முந்திரி, திராட்சையை அந்த நெய்யிலேயே வறுத்துச் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.
விருப்பமானால் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்தால் தெய்வீக மணம் கிடைக்கும்:-)
இனிய புத்தாண்டு வாழ்த்து(க்)கள்.
ஆகா ஆகா சதங்கா - மாவுருண்டை நேத்திக்கே ஆர்டர் பண்ணினே !! இன்னும் வரலியே ...... ம்ம்ம்ம் - துளசி சொன்னதெயும் செய்யலாமே
Excellent idea. I am sure going to try this recipe. Thanks.
Radha
இனிப்புடன் தொடங்கிய இனிய புத்தாண்டு. எடுத்துக் கொண்டேன் சில் உருண்டைகள்:)! செய்தும் பார்க்கிறேன். நன்றி.
வாழ்த்துக்கள் சதங்கா!
துளசி கோபால் said...
// ஒரு கால்கப் முந்திரி, திராட்சையை அந்த நெய்யிலேயே வறுத்துச் சேர்த்தால் இன்னும் சுவை கூடும்.
விருப்பமானால் ஏலக்காய்ப் பொடி, பச்சைக் கற்பூரம் சேர்த்தால் தெய்வீக மணம் கிடைக்கும்:-)//
டீச்சர், கூடுதல் தகவல்களுக்கு நன்றி. எங்கள் ஊர்களில் இது போல் ப்ளைனாக தான் செய்வார்கள்.
cheena (சீனா) said...
// ஆகா ஆகா சதங்கா - மாவுருண்டை நேத்திக்கே ஆர்டர் பண்ணினே !! இன்னும் வரலியே ...... ம்ம்ம்ம் - துளசி சொன்னதெயும் செய்யலாமே//
இங்க பார்சேல் சொல்லிட்டு, தங்க்ஸ் கிட்ட ரெசிப்பி வாங்கி, பதிவு போட்டா, சரி எல்லாரும் வந்து எடுத்துக்கட்டுமேனு, பார்சல படமும் புடிச்சு போட்டாச்சு :)))
//Anonymous said...
Excellent idea. I am sure going to try this recipe. Thanks.
Radha//
Try it out. It is very simple and you will love it.
ராமலக்ஷ்மி said...
// இனிப்புடன் தொடங்கிய இனிய புத்தாண்டு. எடுத்துக் கொண்டேன் சில் உருண்டைகள்:)! செய்தும் பார்க்கிறேன். நன்றி.
வாழ்த்துக்கள் சதங்கா!//
மிக்க மகிழ்ச்சி. செய்து பாருங்கள். எங்க ஊரில் ரொம்ப ஃபேமஸ் இனிப்புகளில் இவரும் ஒருவர் :)))
ஆஹா.......என்ன ருசி
கவின் said...
// ஆஹா.......என்ன ருசி//
படத்தைப் பார்த்தே சொல்றீங்களா. இல்லை சட்டுனு செஞ்சு பாத்திட்டீங்களா ?? :))
மிக நன்று
Post a Comment