Friday, November 9, 2007

பாசிப் பயத்தம் பணியாரம்



தேவையானவை :

1. பச்சரிசி - 1 Cup flat
2. உளுந்து - on top of above flat cup (ie. 10%)

3. பாசிப் பருப்பு - 5 teaspoons

4. முந்திரிப் பருப்பு - 4

5. ஏலக்காய் - 2

6. வெல்லம் - 3/4 Cup


செய்முறை :

பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு இவற்றை ஊறவைத்து, Grinder-ல் நன்றாக அரைக்கவும். மாவு ஓரளவுக்கு கெட்டியாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முந்திரியையும், ஏலக்காயையும் சேர்த்து, நன்றாக அரைத்தவுடன், வெல்லத்தைச் சேர்த்து அரைக்கவும்.

தேவையான மாவை எடுத்து, அதனோடு சிறிது நீர் சேர்ந்து கலக்குங்கள். தோசை மாவு Consistency அளவுக்கு நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு முன்னர் வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் வைக்கவும்.

எண்ணை நன்கு காய்ந்தவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து வானலியின் நடுவே ஊற்றவும்.

சிறிது நேரத்தில், தலைகீழாய்ப் பிரசவிக்கும் குழந்தைபோல், மிதந்து வரும் பணியாரத்தை, அதன் ஓரங்கள் சிவக்க ஆரம்பிக்கும்போது திருப்பி விடவும். ஓரிரு வினாடிகளில் பணியாரத்தை எடுத்து விடலாம்.

வரிசையாக அடுக்கினால் பார்வையாக இருக்கும். உண்ணும் போது இனிமையாகவும் இருக்கும். செய்து பார்த்துப் பின்னூட்டமிடுங்கள்.

9 comments:

துளசி கோபால் said...

//சிறிது நேரத்தில், தலைகீழாய்ப் பிரசவிக்கும் குழந்தைபோல், மிதந்து வரும் பணியாரத்தை,...//

:-)))))

எதுக்குங்க இந்த வேர்டு வெரிஃபிகேஷன்?

சல்லியம்.

சதங்கா (Sathanga) said...

துளசி டீச்சர்.

இன்னிக்குத் தான் தமிழ்மணத்தில இணைத்தேன் இத்தளத்தை. மொத comment உங்களது. மிக்க நன்றி.

சுட்டிக்காட்டிய word verification நீக்கி விட்டேன் :)

தொடர்ந்து வருகை தாருங்கள்.

Anonymous said...

seems delicious.. this reminds me about Athirasam..

Sengkamalam

சதங்கா (Sathanga) said...

வருகைக்கு நன்றி செங்கமலம்.

//reminds me about Athirasam.//

கொஞ்சம் வித்தியாசப்படும். சட்டெனப் பாக்கறதுக்கு ஒரே மாதிரியா இருக்கும், ஆனா அதிரசத்தை விட இனிப்புக் கம்மியான பதார்த்தம் இது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சதங்கா!
எங்கள் ஈழப் பயத்தம் பணியாரம் ,வேறு மாதிரி செய்முறை
வேறு இடுகைகளும் .
நம்ம வீட்டுக்காரி நன்கு செய்வார். நான் விரும்பிச் சாப்பிடுவேன்.
இதை இப்போது தான் பார்க்கிறேன்.

சதங்கா (Sathanga) said...

யோகன்,

வருகைக்கு நன்றி.

//நம்ம வீட்டுக்காரி நன்கு செய்வார். நான் விரும்பிச் சாப்பிடுவேன்.//

நீங்களும் நம்மைப் போல கொடுத்துவைத்தவர் தான் :)

Anonymous said...

How about vellai panniyaram!
It has been a long time since I
tasted one!

Divya said...

Looks yummy!!

சதங்கா (Sathanga) said...

திவ்யா,

taste மட்டும் இல்லை, சுவையும் yummy தான். செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள் :)