தேவையானவை:
- ப்ரௌன் அரிசி - 1 கப்
- சீனி - 1/4 to 1/2 கப்
- தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்
செய்முறை:
- அரிசியை, நீரில் இருபத்திநான்கு மணி நேரம் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டவும்.
- மற்றொரு பாத்திரத்தில் அரிசியை இட்டு, அதற்கும் மேல் ஒரு செ.மீ. அளவிற்கு நீர் சேர்க்கவும்.
- ப்ரெஷர் குக்கரை அடுப்பில் ஏற்றி, கீழே சிறிது நீர் விட்டு, அரிசி பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
- முதல் விசில் வந்தவுடன், சிம்மில் வைத்து இருபத்தி ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
- பின் அடுப்பை அனைத்து, ப்ரஷர் நீங்கியவுடன், அரிசியை நன்றாக மசித்து விடவும்.
- சீனி, தேங்காய் துறுவல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- சூடான, சுவையான கவுணி அரிசி தயார்.
4 comments:
இதுக்கு ரெட் ரைஸ்ன்னு பெயர்.
க்ளூட்டோனியஸ் ரெட் ரைஸ்.
பிரவுண் அரிசி என்பது வேற வகை.
24 மணி நேரம் ஊறவைக்கும் அவசியம் இல்லை.
ப்ரஷர் குக்கரில் வைப்பதால் 10 நிமிசம் ஊறினால் போதும்.
மகளுக்குப் பிடிக்கும் என்று அடிக்கடி செஞ்ச அனுபவம் இருக்கு.
ஒரு ஏலக்காய் தட்டிப்போடுங்க.
மணமா இருக்கும்.
கேள்விப்படாத, பாக்காத அரிசி! இங்கே சம்பா அரிசினு சிவப்பு கலரில் கிடைக்கும் அதுவா? அல்லது காப்பரிசினு இன்னும் டார்க் கலரில் இருக்கும் அதுவா?
புதிய செய்முறையா இருக்கு........நன்றி.
எளிதான சமையல் குறிப்பு மாதிரி தெரிகிறதே!
Post a Comment