Saturday, February 16, 2008

குழிப் பணியாரம்



தேவையானவை:
  1. 1 1/2 கப் பச்சரிசி
  2. 1 1/2 புழுங்கல் அரிசி
  3. 1/2 கப் உளுத்தம் பருப்பு
  4. சிறிது வெந்தயம்
  5. வெல்லம் ‍
  6. உப்பு
  7. பச்சை மிளகாய்
  8. தேங்காய் துருவல்
  9. கறிவேப்பிலை

செய்முறை:

  • இரு அரிசிகளையும் சுமார் ஆறு மணி நேரம் ஊர வைக்கவும். உளுந்தையும், வெந்தயத்தையும் தனியாக ஊர வைக்கவும்.
  • பதினைந்து நிமிடங்கள் உளுந்தையும், வெந்தயத்தையும் க்ரைண்டரில் ஆட்டி, பின்பு அரிசிகளையும் சேர்த்து ஆட்டவும். மை போல‌ஆட்டாமல், அதற்குமுன்னாலேயே கிரைண்டரை நிறுத்தி விடவும்.
  • சிறிது உப்பு சேர்த்து, மாவைக் கரைத்து புளிக்க வைக்கவும்.

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் கான்ஸப்ட் இங்கயும் அப்ளை பண்ணலாம் :)

முதல் மாங்காய்: இனிப்புப் பணியாரம்

  • வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரையும் வரை விடவும்.
  • புளித்த மாவை தேவையான அளவு எடுத்து, தேங்காய் துருவல் சிறிது சேர்த்துக்கொள்ளவும்.
  • அதில் வெல்லக் கரைசலையும் சேர்த்து ஓரளவுக்கு இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

இரண்டாவது மாங்காய்: வெள்ளை

  • வானலியில் சிறிது எண்ணைய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை போட்டுவெடித்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
  • புளித்த மாவைத் தேவயான அளவு எடுத்து, நீர், உப்பு, தேங்காய் துருவல் சிறிது, மற்றும் தாளித்தவைகளைச் சேர்த்துக் கலக்கவும்.

இப்ப பணியாரம்:

  • அடுப்பில் குழிப் பணியாரச் சட்டியை வைத்து, அனைத்துக் குழிகளிலும் சிறிதுஎண்ணைய் விடவும்.
  • சட்டி சூடானவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து ஊற்றவும்.
  • சிறிது நேரம் கழித்து கருது ஒரு மூலையில் பிடித்து அப்படியே அலாக்காகதூக்கித் திருப்பி விடவும்.
  • சில விநாடிகளில் பணியாரம் ரெடி.

10 comments:

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

நல்ல பதிவு!
தரமான வெளியீடு!!
தொடரட்டும் உங்கள் பணி!!!
நண்பர்களுக்குச் சொல்லி, படிக்கச் சொல்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

pudugaithendral said...

குழிப்பணியாரம் மறைந்த என் பாட்டியை
நினைவு படுத்தியது.

வகை வகையாய் செய்து கொடுபார்கள்.

அவர்கள் நினைவாக நானும் குழிப்பணியாரம் செய்து பிள்ளைகளுக்கு கொடுக்கிறேன்.

நானானி said...

செய்து பார்க்கத் தூண்டும் வகையில் அழகாக..தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்! சதங்கா! அருமை!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

படத்தைப் பார்த்தாலே எச்சி ஊறுதே :) தமிழக சிற்றூர்களில் இட்டிலிக்கு அடுத்து இது தான் பெரிய பலகாரம் :) ஒரு e-பனியாரம் இருந்தா அனுப்பி விடுங்க... :)

சதங்கா (Sathanga) said...

ஜோதிபாரதி,

வருகைக்கு நன்றி.

//நண்பர்களுக்குச் சொல்லி, படிக்கச் சொல்கிறேன்.//

நல்லாச் செய்ங்க. படிக்க மட்டும் சொல்லாதீங்க. செஞ்சு பார்க்கவும் சொல்லுங்க. just curious, Girl friend தானே ;-‍)

சதங்கா (Sathanga) said...

புதுகைத் தென்றல்,

வருகைக்கு நன்றி.

// குழிப்பணியாரம் மறைந்த என் பாட்டியை
நினைவு படுத்தியது.//

இந்த மாதிரி அவர்கள் நினைப்பைப் பெற்று அவர்களைப் போற்றியது நெகிழ்ச்சியாக இருக்கிறது.

உங்கள் பிள்ளைகளுக்கும் செய்து கொடுக்கிறீர்களே, great.

சதங்கா (Sathanga) said...

நானானி மேடம்,

//
செய்து பார்க்கத் தூண்டும் வகையில் அழகாக..தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்! சதங்கா! அருமை!//

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சதங்கா (Sathanga) said...

ரவிசங்கர்,
//
படத்தைப் பார்த்தாலே எச்சி ஊறுதே :) தமிழக சிற்றூர்களில் இட்டிலிக்கு அடுத்து இது தான் பெரிய பலகாரம் :) ஒரு e-பனியாரம் இருந்தா அனுப்பி விடுங்க... :)
//

உங்கள் ரசனை கண்டு மிக்க மகிழ்ச்சி.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//
ஜோதிபாரதி said...
நல்ல பதிவு!
தரமான வெளியீடு!!
தொடரட்டும் உங்கள் பணி!!!
நண்பர்களுக்குச் சொல்லி, படிக்கச் சொல்கிறேன்.

சதங்கா (Sathanga) said
நல்லாச் செய்ங்க. படிக்க மட்டும் சொல்லாதீங்க. செஞ்சு பார்க்கவும் சொல்லுங்க. just curious, Girl friend தானே ;-‍)//

செய்து பார்க்கச் சொல்கிறேன்.
ஆண்கள் பெண்கள் எல்லோரும் செய்யலாமே. எல்லா நண்பர்களுக்கும் சொல்கிறேன்.

அன்புடன்,
ஜோதிபாரதி.

குடந்தை அன்புமணி said...

குழிப்பணியாரம் கோதுமை மாவில் செய்வாங்க எங்க அம்மா! உடம்புக்கும் நல்லது.