Wednesday, January 1, 2014

மசாலசீயம்

வடை போலவே ஒரு பலகாரம் மசாலசீயம்.  வடை கூட பல சமயங்களில் சரியாக வட்டமாக இருக்கணும், ஓட்டை சரியாக வரவேண்டும், எண்ணை குடிக்காமல் பார்த்துக் கொள்ளணும் என்றெல்லாம் ஒரு டென்ஷன் இருக்கும்.  ஆனால், மசாலசீயம் செய்வதற்கு மிக எளிதானது.  வடைக்குப் பதிலாகவும் இதனைச் செய்யலாம்.



தேவையானவை:

  • பச்சரிசி - 1 கப்
  • புழுங்கல் அரிசி - 1 தேக்கரண்டி
  • வெள்ளை உளுந்து - 1 கப்
  • ஜவ்வரிசி - 1 தேக்கரண்டி


மேலே உள்ளவற்றை ஒரு மணி நேரத்திற்கு ஊறவைத்த பின், மிக்ஸியிலோ, கிரைண்டரிலோ அரைத்துக் கொள்ளவும். [வடை அல்லது இட்லிக்கு ஆட்டும் உளுந்து பதத்தில்].  ஆட்டும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

தாளிக்க:

  • கடுகு - சிறிதளவு
  • கறிவேப்பிலை - சிறிதளவு நறுக்கியது
  • சின்ன வெங்காயம் - 6-8
  • பச்சை மிளகாய் - 2-3
  • துருவிய தேங்காய் - 3 தேக்கரண்டி


செய்முறை:

  • தாளிக்கும் பொருட்களைத் தாளித்து, அரைத்து வைத்துள்ள மாவில் நன்கு கலந்து கொள்ளவும்.
  • மிதமான சூட்டில் வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்தவுடன், மேலாக மாவை எடுத்து, சிறு சிறு உருண்டைகளாக எண்ணையில் இடவும். [அவ்வப்பொழுது மாவை நன்கு அடித்துப் பயன்படுத்தினால் சீயம் மிருதுவாக வரும், புகைப்படம் காண்க]
  • அவ்வப்பொழுது சீயங்களைத் திருப்பிக் கொண்டே இருக்கவும்.  பொன்னிறமாக மாறுகையில் எடுத்தால் சீயம் ரெடி.


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

செய்முறை குறிப்பிற்கு நன்றி...

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களுக்கும், தங்களின் குடும்பத்தார் உட்பட அனைவருக்கும் எனது மனமார்ந்த 2014 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சதங்கா (Sathanga) said...

நன்றி திண்டுக்கல் தனபாலன் !!!

Angel said...

வலைசரத்தில் இருந்து வந்தேன் !! என் கண்ணில் பட்டது இந்த ரெசிப்பி ..பொருட்களை ஊறவைச்ஜாச்சு ..செய்து விட்டு சொல்கிறேன் :) பகிர்வுக்கு நன்றி

சதங்கா (Sathanga) said...

வருகைக்கு நன்றி ஏஞ்சலின். செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள். Good luck !!!