Wednesday, December 25, 2013

தேங்காய் வெங்காயச் சட்னி

சமையல் பலவிதம் சட்னிகள் ஒவ்வொன்று புதுவிதம்.  தேங்காய்ச் சட்னியோ, தக்காளிச் சட்னியோ தான் அநேக தமிழ்க் குடும்பங்களில் பிரதானமாகத் தொட்டுக் கொள்ளச் செய்யப்படுகிறது.  'இன்றைக்கு இட்லிக்கு என்னம்மா தொட்டுக்கொள்ள?' என்று கேட்கும் பிள்ளைகளுக்கு மேலே கூறிய சட்னியைச் சொல்லும்போதே, 'ஓ அப்படியா' என்று அலுப்பு தட்டும் குரல் தான் கேட்கிறது.  செய்வதற்கு மிக எளிதான இந்த சட்னியை இன்று வீட்டில் செய்கையில் பிள்ளைகள் முகத்தில் மகிழ்ச்சி.




தேவையானவை:

  • தேங்காய் - அரை மூடி
  • சின்ன வெங்காயம் - 5-7
  • வரமிளகாய் - 3
  • புளி - நெல்லிக்காய் அளவு
  • உப்பு - தேவயான அளவு


தாளிக்க:

  • கடுகு
  • கறிவேப்பிலை
  • வரமிளகாய் - 1 சிறியது


செய்முறை:

  • தேவையானவற்றை எல்லாம் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தாளிக்கும் பொருட்களைத் தாளித்து அரைத்த சட்னியில் மேல் விடவும்.



2 comments:

ராஜி said...

எங்க வீட்டுல அடிக்கடி செய்யும் சட்னி. வீட்டுக்காரருக்கு பிடிக்காது. ஆனா, பிள்ளைகளுக்கு பிடிக்கும். ரெண்டு இட்லி கூடுதலா வயத்துக்குள்ள இறங்கும்.

சதங்கா (Sathanga) said...

நன்றி ராஜி !!!