தேவையானவை:
அரிசி மாவு : 4 1/2 cup
உளுத்த மாவு : 1 cup
சீரகம் : ஒரு teaspoon
பட்டர் : ஒரு teaspoon
உப்பு : தேவையான அளவு
எண்ணை : டீப் ஃப்ரை பண்ணும் அளவிற்கு
செய்முறை:
- வாணலியில் எண்ணை ஊற்றி நன்கு காய விடவும்.
- அரிசி மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், பட்டர் எல்லாம் கலந்து, சிறிது சிறிதாய் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். சப்பாத்தி மாவு அளவிற்கு consistency இருப்பது நல்லது.
- சிறு சிறு உருண்டைகளாக மாவை எடுத்து, கொஞ்சம் பெரிய கொழுக்கட்டை பிடிப்பது போல் பிடித்து வைத்து கொள்ளுங்கள்.
- எண்ணை நன்கு காய்ந்ததும், ஒரு கொழுக்கட்டை மாவை எடுத்து, தேன்குழல் (முறுக்கு) கட்டையில் வைத்து இரண்டு அல்லது மூன்று எண்ணிக்கையில் பிழியவும்.
- நன்கு நுரை தள்ளும் அலை போல எண்ணை இருக்க வேண்டும். அப்பொழுது தான் தேன்குழல் நன்றாக(பூசினாற்போல்) புஸ்ஸென்று இருக்கும்.
- நுரை வேகம் குறையும்போது தேன்குழல்களைத் திருப்பிவிடுங்கள்.
- நுரை மறையும் போது அல்லது சிலநொடிகள் முன்னரே அல்லது நிறம் மாறும் நேரம் தேன்குழலை எடுத்து விடலாம்.
- நொடிகளில் நொறுக்கிட தீனி ரெடி :)
15 comments:
//பட்டர்// - இதை நாங்க வெண்ணைன்னு சொல்லுவோம் :-)
நான் இந்த வீரவிளையாட்டுக்கெல்லாம் போறதில்லை.. அம்மா ஊரிலிருந்து வந்தா பண்ணுவாங்க, அல்லது அப்பப்ப ஊரிலிருந்து அனுப்புவாங்க. இனிமே (எப்போ?) செய்ய ஆரம்பிக்கணும்.
I love this. It looks so good. I am going to try this. Thanks for sharing.
Ramya
/////தேவையானவை:
அரிசி மாவு : 4 1/2 cup
உளுத்த மாவு : 1 cup
சீரகம் : ஒரு teaspoon/////
ஹலோ சதங்கா! அளவில மிஸ்டேக் இருக்குது!
'அரிசி மாவு + உளுந்து மாவு' மூன்றிற்கு ஒரு கப் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். சீரகம் கிடையாது.
- இப்படிக்கு
தேன்குழலில் புரண்டு எழுந்தவன்!
சேதுக்கரசி,
//
//பட்டர்// - இதை நாங்க வெண்ணைன்னு சொல்லுவோம் :-)
//
யோசிச்சேன், பட் தமிழ்ப்படுத்தவில்லை. எங்க வீட்டிலயும் அப்படித் தான் சொல்லுவார்கள் :)
//
நான் இந்த வீரவிளையாட்டுக்கெல்லாம் போறதில்லை.. அம்மா ஊரிலிருந்து வந்தா பண்ணுவாங்க, அல்லது அப்பப்ப ஊரிலிருந்து அனுப்புவாங்க. இனிமே (எப்போ?) செய்ய ஆரம்பிக்கணும்.
//
இந்த அளவிற்கு பிழிய எங்களுக்கு ஒரு மணி நேரம் ஆச்சு. எப்போ என்று இழுக்காதீர்கள், வார நாட்களில் கூட செய்யலாம் நீங்க.
செய்து பார்த்து சுவைத்து மகிழுங்கள் ரம்யா
//
ஹலோ சதங்கா! அளவில மிஸ்டேக் இருக்குது!
'அரிசி மாவு + உளுந்து மாவு' மூன்றிற்கு ஒரு கப் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். சீரகம் கிடையாது.
//
வாத்தியார் ஐயா இது NRI Version என்று தலைப்பு போட்டுருக்கோமே ! அதனால அளவுகளில் சிறிது மாற்றம் செய்து சீரகத்தையும் சேர்த்திருக்கிறோம். இங்கே சீன / இந்தியக் கடைகளில் கிடைக்கும் மாவுகளுக்கு ஏற்ப கூடக் குறைய அளவுகள் மாறுபடுகிறது.
//
- இப்படிக்கு
தேன்குழலில் புரண்டு எழுந்தவன்!
//
இணையத்தில பதிகிறீர்கள்,
இல்லத்தில் பிழிகிறீர்கள்.
=:D, சரியா ?
நல்லா இருக்குது...
இப்படிக்கு,
யாராவது செய்து குடுத்தால் சாப்பிட தயாராக இருப்பவன்... :-)
ஏன்யா - எங்க வீட்ல திட்றாங்க - இங்க இருந்தப்போ இதல்லாம் பண்ணி குடுக்காம படம் போட்டு காட்றீங்களாம் :-)
ஐ.. முறுக்கு, பணியாரம் ன்னு எனக்கு பிடித்த ஐட்டமா சொல்லியிருக்கீங்களே..
அருமை.. ட்ரை பண்றேன்..
சின்ன பையன்,
யாராவது என்ன யாராவது. இந்தப் பக்கம் ஒரு நடை (பயணம்) வாங்க. கொடுத்து அசத்திருவோம் :))
நாகு,
உங்களுக்கே தெரியும். நாங்க ஆசைப்பட்டது ரிச்மண்டிலேயே இருக்கணும் என்று தான். விதி வலியது என்பார்களே. என்ன செய்யறது இங்க வந்துட்டோம் :( ஒரு ட்ரிப் ரிச்மண்ட் போட்டு, அங்க வரும்போது செய்து எடுத்து வருகிறோம். :))
கோகுலன்,
வருகைக்கு நன்றி.
//அருமை.. ட்ரை பண்றேன்..//
என்று சொல்லி நிறுத்தி விடாதீர்கள். செய்து பாருங்கள். நிச்சயம் நன்றாக இருக்கும்.
உளுந்து + அரிசி மாவு கடாயில் வறுத்துவிட்டு ஆறிய பின் முறுக்கு பிழிந்தால், முறுக்கு மணமாகவும்...மொறுமொறுப்பாகவும் இருக்கும்.
திவ்யா,
உங்கள் tip-க்கு மிக்க நன்றி.
இந்தியன் வர்ஷன் சொல்லவா?
புழுங்கல் அரிசி- ஊறவைத்து அரைத்தது- 2கப்
பச்சரிசி - தண்ணீரில் களைந்து துணிபரப்பி காயவைத்து லேசான ஈரப்பதத்திலேயே மெஷினில் கொடுத்து திரித்தது 2கப்
உளுத்தம் பருப்பு - வெறும் கடாயில் லேசாக வறுத்து மெஷினில் திரித்தது 1 1/2கப்
சீரகம் அல்லது எள் 2 ஸ்பூன்
உப்பு
எல்லாத்தையும் சேர்த்து பிழியும் பதத்தில் பிசைந்து கொண்டு முறுக்கு அச்சில் இட்டு கொதிக்கும் எண்ணையில் பிழிய வேண்டும். அப்புட்டுதான். இதை வெந்தும் வேகாமலும் எடுத்தால் ஒரு ருசி...முறுமுறுப்பாக எடுத்தால் இன்னொரு ருசி!
இப்படிக்கு
திருநெல்வேலியில் முறுக்கு, தேன்குழல்,தட்டை என்ற சூழலிலேயே சுழன்று..பிழியப்பட்டு வந்தவள்!!!!
Post a Comment