
தேவையானவை:
- ப்ரௌன் அரிசி - 1 கப்
- சீனி - 1/4 to 1/2 கப்
- தேங்காய் துறுவல் - 5 டீஸ்பூன்
செய்முறை:
- அரிசியை, நீரில் இருபத்திநான்கு மணி நேரம் ஒரு பாத்திரத்தில் ஊற வைத்து, பின் நீரை வடிகட்டவும்.
- மற்றொரு பாத்திரத்தில் அரிசியை இட்டு, அதற்கும் மேல் ஒரு செ.மீ. அளவிற்கு நீர் சேர்க்கவும்.
- ப்ரெஷர் குக்கரை அடுப்பில் ஏற்றி, கீழே சிறிது நீர் விட்டு, அரிசி பாத்திரத்தை உள்ளே வைக்கவும்.
- முதல் விசில் வந்தவுடன், சிம்மில் வைத்து இருபத்தி ஐந்து நிமிடங்கள் வேக விடவும்.
- பின் அடுப்பை அனைத்து, ப்ரஷர் நீங்கியவுடன், அரிசியை நன்றாக மசித்து விடவும்.
- சீனி, தேங்காய் துறுவல் இரண்டையும் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
- சூடான, சுவையான கவுணி அரிசி தயார்.