Friday, November 16, 2007

கோழி குழம்பு



தேவையானவை :

கோழி - 1/2 kg
சின்ன வெங்காயம் - 12
பூண்டு - 10 பல்
தக்காளி - 2
மஞ்சள் தூள்
மிளகாய் தூள் - 2 or 3 spoon


விழுதாய் அரைக்க :

Few பெ.சீரகம், கசகசா, பூண்டு - 3 பல், இஞ்சி, தேங்காய் துருவல் - 5 spoon

செய்முறை :

வானலியில் சிறிது எண்ணை ஊற்றி காய்ந்ததும் சீரகம், வெந்தயம் போட்டு, பிறகு பூண்டையும், வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் கழித்துக் கோழியை சேர்த்து வதக்கவும். பின்பு தக்காளியையும் வதக்கலில் சேர்க்கவும்.

கோழி நன்றாக வதங்கியபின் உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்து நாலைந்து நிமிடங்கள் கிளற விடவும். தேவையான அளவு நீர் சேர்த்து, சிறிது கிளறி மூடி வைக்கவும்.

கோழி முக்கால்வாசி வெந்தபின், அரைத்த விழுதைச் சேர்த்து, இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதிக்க விடுங்கள்.

இவை இட்லி, தோசை, சாதத்திற்கு ஏற்ற side dish-ஆக இருக்கும்.

Sunday, November 11, 2007

Chettinad Kitchen - வலை உலகில்

வலையுல அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் !

எனக்கு எப்பவுமே சமையல் கலை மீது ஒரு ஈடுபாடு உண்டு. 'கல்யாணத்துக்கு அப்புறம் தானே' என்று, எனது அம்மா மாதிரி நீங்களும் கேக்கக் கூடாது ;-)

நாம் வழக்கமா செய்யும் உணவுகளின் ரெசிப்பிக்கள் ஏராளம். கதை, கவிதை-னு எழுதி ப்ளாகில் பதிந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிற மாதிரி, இவற்றையும் செய்யலாம் என்ற எண்ணத்தில் இந்த வலைத்தளத்தை நானும், எனது தங்கமணியும் ஆரம்பித்திருக்கிறோம்.

அப்படியே வட்டார வழக்கில் இருக்கும் பெயர்களையே பதார்த்தங்களுக்குத் தந்து, இந்திய சென்டிமென்ட் படி ஸ்வீட்ல ஆரம்பிக்கிறோம்.

வழக்கம் போல் வந்து வாசித்து, பிடிக்கும் பட்சத்தில் பின்னூட்டமிட்டுச் சொல்லுங்கள்.

நன்றி.

கோழி பொரியல் (Marinated)

தேவையானவை :

கோழி - 1/2 k.g.
தக்காளி - 1
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10 பல்
வர மிளகாய் - 5 (Alternate - தனி மிளகாய்த் தூள் - 1 teaspoon)
இஞ்சி - சிறிதளவு
கிராம்பு - 3
ஏலக்காய் - 2
பட்டை - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/2 teaspoon

செய்முறை :

வர மிளகாயை சிறிது நேரம் தண்ணீரில் ஊர வைக்கவும். Mixie-ல் மிளகாயை முதலில் அரைத்துக் கொள்ளவும். அதனோடு நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

சிறு துண்டுகளாக நறுக்கி கழுவிய கோழியில், மஞ்சள் தூள் மற்றும் அரைத்ததையும் சேர்த்து நன்கு கிளறி மூடிவைக்கவும். சில மணி நேரங்கள் கழித்து ... (குறைந்தது 1 மணி நேரம்)

குக்கரில் எண்ணையிட்டு, கிராம்பு, எலக்காய், பட்டை போட்டு, பின்பு கோழி கலவையை அதில் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை காத்திருக்கவும்.

ப்ரஷர் நீங்கியபின் குக்கரைத் திறந்து, தண்ணீர் வற்றும் வரை கிளரிவிடுங்கள். சுவையான கோழி பொரியல் ரெடி. பின் அலங்கரித்துப் பறிமாரவேண்டியது தான் :)

Friday, November 9, 2007

பாசிப் பயத்தம் பணியாரம்



தேவையானவை :

1. பச்சரிசி - 1 Cup flat
2. உளுந்து - on top of above flat cup (ie. 10%)

3. பாசிப் பருப்பு - 5 teaspoons

4. முந்திரிப் பருப்பு - 4

5. ஏலக்காய் - 2

6. வெல்லம் - 3/4 Cup


செய்முறை :

பச்சரிசி, உளுந்து, பாசிப்பருப்பு இவற்றை ஊறவைத்து, Grinder-ல் நன்றாக அரைக்கவும். மாவு ஓரளவுக்கு கெட்டியாகவே இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். முந்திரியையும், ஏலக்காயையும் சேர்த்து, நன்றாக அரைத்தவுடன், வெல்லத்தைச் சேர்த்து அரைக்கவும்.

தேவையான மாவை எடுத்து, அதனோடு சிறிது நீர் சேர்ந்து கலக்குங்கள். தோசை மாவு Consistency அளவுக்கு நீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு முன்னர் வானலியில் எண்ணையிட்டு அடுப்பில் வைக்கவும்.

எண்ணை நன்கு காய்ந்தவுடன், சிறு குழிக் கரண்டியில் எடுத்து வானலியின் நடுவே ஊற்றவும்.

சிறிது நேரத்தில், தலைகீழாய்ப் பிரசவிக்கும் குழந்தைபோல், மிதந்து வரும் பணியாரத்தை, அதன் ஓரங்கள் சிவக்க ஆரம்பிக்கும்போது திருப்பி விடவும். ஓரிரு வினாடிகளில் பணியாரத்தை எடுத்து விடலாம்.

வரிசையாக அடுக்கினால் பார்வையாக இருக்கும். உண்ணும் போது இனிமையாகவும் இருக்கும். செய்து பார்த்துப் பின்னூட்டமிடுங்கள்.